வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (19:19 IST)

இந்தோனேஷிய விமான விபத்து: 100 பேர் பலி

இந்தோனேஷியாவின் மேற்கிலுள்ள சுமத்ரா குடியிருப்புப் பகுதியில், ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் இடிந்து விழுந்த விபத்தில், 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இதுவரை குறைந்தது 49 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
நான்கு இயந்திரங்களைக் கொண்ட அந்த சி-130 ரக ஹெர்குலஸ் விமானத்தில் குறைந்தது 12 விமானக் குழு உறுப்பினர்கள் பயணித்ததாக நம்பப்படுகிறது.
 
மேடன் நகரில் இருந்து வானுக்கு புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே நொறுங்கி கீழே விழுந்த அந்த விமானம், அருகில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களையும் கடைகளையும் சேதப்படுத்தியது.
 
இந்த விமான விபத்துக்கு என்ன காரணம் என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
 

 
தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வரவேண்டும் என்று அந்த விமானி, விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் கேட்டுக்கொண்டதாக விமானப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
விமானத்தின் இடிபாடுகளில் தீப்பற்றி எறிவதையும், கரும்புகை மண்டலம் எழுவதையும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி காண்பிக்கிறது.