வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 21 மே 2015 (09:24 IST)

ஜாம்பியாவில் சிறுத்தை, சிங்கம் வேட்டைக்கு அனுமதி

சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை ஜாம்பியா விலக்கியுள்ளது.
 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தடை கொண்டுவரப்பட்டது.
 
இதையடுத்து சிறுத்தைகளை வேட்டையாடும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் என ஜாம்பியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ழான் கபாட்டா தெரிவித்துள்ளார்.
 
தற்போது நாட்டில் 8000 சிறுத்தைகளும், 4000 சிங்கங்களும் இருப்பது வான்வழியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் காட்டுகின்றன என ழான் கப்பாட்டா அம்மையார் கூறுகிறார்.
 
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
 
எனினும் தங்களின் குடும்பங்களால் கைவிடப்பட்ட வயதான ஆண் மிருகங்களை மட்டுமே வேட்டையாடுபவர்கள் கொல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
குறைந்துவரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த மிருகங்கள் வேட்டையாடுவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.