செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (19:30 IST)

கோட்டாபய ராஜபக்ஷ மீது ஊழல் ஒழிப்புக் குழு விசாரணை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் மற்றொரு இளைய சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலருமான, கோட்டாபய ராஜபக்ஷவை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்.
 
அவர் பதவியில் இருந்தபோது லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டார்.
 
புதன்கிழமைதான், மஹிந்த ராஜபக்ஷவின் மற்றொரு சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான, பசில் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டார்.
 
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளை மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கல் நடவடிக்கை என்று வர்ணித்திருக்கிறார்.
 
இதனிடையே, கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை நீதி மன்றம்
 
நேற்றைய தினம் பிறப்பித்த போதிலும் அதனை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
இதன் காரணமாக பவுத்தாலோக மாவத்தை உட்பட அதனை அண்மித்த விதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
 
இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.
 
அதன் பின்பு அவர் வாக்குமூலத்தை தருவதற்கு, வேறொரு தினத்தை நிர்ணயிக்குமாறு, அவரது வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இதன்படி வாக்கு முலத்தை வேறொரு தினத்தில் பதிவு செய்வதற்கு ஆணையம் தீர்மானித்தது.