வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (18:47 IST)

ஜியா ஜியாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஹாங்காங்

உலகளவில், தான் இயற்கையாக வசிக்கும் சூழலுக்கு வெளியே வாழ்ந்து வருவதிலேயே மிக வயதான பாண்டா என்று நம்பப்படும் ஜியா ஜியாவின் 37வது பிறந்தநாளை ஹாங்காங் நகரமே கொண்டாடுகிறது.
 
Jia Jia beside her birthday cake at Ocean Park on her 37th birthday
 
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஜியா ஜியா இருந்துவரும் பொழுதுபோக்கு பூங்காவான ஓஷன் பார்க்கில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
 
இயற்கைச் சூழலில் காட்டுப் பிரதேசங்களில் வாழும் பாண்டாக்கள் பொதுவாக 20 ஆண்டுகள் வரையிலும், மிருகக்காட்சி சாலை போன்ற இடங்களில் வாழும்போது அவை 25 ஆண்டுகள் வரையிலும் வாழும்.
 
இதுவரை ஆறு குட்டிகளை ஈன்றெடுத்துள்ள இந்த பாண்டா, அதன் தாய்மை உணர்வுக்காகவும் சாந்தமான சுபாவத்திற்காகவும் எல்லோராலும் நேசிக்கப்படுகிறது.
 
எனினும் இப்போது அதன் கூண்டுக்குள் இருந்து சாப்பிடுவதையே அந்தப் பெண் பாண்டா விரும்புகிறது என ஹாங்காங்கிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.