வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (20:36 IST)

மகிழ்ச்சிக்கு ஒரு அமைச்சகம், சகிப்புத்தன்மைக்கு ஒன்று

அரசின் அமைச்சகங்களில் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக வரும் இதனை அறிவித்த ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டோம், புதிதாக நியமிக்கப் பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான துணை அமைச்சர் , சமூக நலன் மற்றும் திருப்திக்கான கொள்கைகளை வகுப்பார் என்றார்.


 

 
பல அமைச்சரவைகள் ஒன்றிணைக்கப்படும், பெரும்பாலான அரச சேவைகள் வெளியாருக்குத் தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
"அரசுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவேண்டும். நமக்கு மேலும் அதிக அமைச்சகங்கள் தேவையில்லை.
 
ஆனால் மாற்றத்தை சமாளிக்க்க் கூடிய திறன் படைத்த கூடுதல் அமைச்சர்கள் தேவை”, என்று அவர் துபாயில் திங்களன்று உலக அரசாங்க உச்சிமாநாட்டில் பேசுகையில் கூறினார்.
 
இளைஞர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய மற்றும் மக்களின் ஆசைகளை எட்டக்கூடிய ஒரு இளமையான, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய அரசு வேண்டும் என்றார் அவர்.
 
புதிதாக நியமனம் செய்யப்படவிருக்கும் சகிப்புதன்மைக்கான துணை அமைச்சர் அந்த சகிப்புத்தன்மையை என்ற அம்சத்தை, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் சமூகத்தின் ஒரு அடிப்படை விழுமியமாக மேம்படுத்துவார் என்று தனது ட்விட்டர் கணக்கில் அவர் தெரிவித்தார்.
 
ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கான இளைஞர் தேசிய கவுன்சில் ஒன்று உருவாவதையும் பிரதமர் அறிவித்தார்.
 
இந்த இளைஞர்கள் குழு அரசுக்கு இளைஞர்கள் பிரச்சனைகளில் ஆலோசனை கூறும். இதற்கு தலைவராக, 22வயதுக்கு மேற்படாத ஒரு பெண் துணை அமைச்சர் இருப்பார் என்றார் அவர்.
 
“இளைஞர்களின் சக்தி எதிர்காலத்தில் நமது அரசை இட்டுச்செல்லும்” என்றார் அவர்.