வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (16:39 IST)

எபோலாவால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் குணமடைந்தார்

ஆப்பிரிக்காவின் மேற்கிலுள்ள கினீயில் கடைசி எபோலா நோயாளி என்று கருதப்படுபவரும் குணமடைந்து தலைநகர் கொனாக்ரியிலுள்ள சிகிச்சை மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
 

 
அந்தக் குழந்தையில் நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனைகளும் அவர் எபோலாவில் இருந்து குணமடைந்ததைக் காட்டியுள்ளன என்று கினீயின் எபோலா ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
அடுத்த ஆறு வாரங்களில் கினீயில் யாருக்கும் புதிதாக எபோலா வந்ததாக தகவல் இல்லை என்றால், அந்நாட்டில் எபோலா முற்றாக இல்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
 
எபோலா பரவல் ஒழிக்கப்படுவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்று கருதும் சுகாதாரப் பணியாளர்கள் தாம் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
 
இம்முறையில் கினீயிலிருந்துதான் பரவ ஆரம்பித்த எபோலா மேற்கு ஆப்பிரிக்காவில் பதினோராயிரத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ளது.
 
அண்டை நாடுகளான சியர்ரா லியோனிலும் லைபீரியாவிலும் எபோலா முற்றாக இல்லை என்று ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.