Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜி.எஸ்.டி - என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு வரி?


Murugan| Last Modified சனி, 1 ஜூலை 2017 (17:39 IST)
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இன்றுமுதல் (சனிக்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. சுமார் 1200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் வரி நிர்ணயம் செய்துள்ளது. தனித்தனிப் பிரிவுகளின்கீழ் 5 முதல் 28 சதவிகித வரி வரம்புகளில் பல்வேறு பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 
பூஜ்ஜியம் வரி (வரி விதிக்கப்படாத பொருட்கள்):
 
பால்,  தானியங்கள், பழங்கள், உப்பு, அரிசி, அப்பளம், ரொட்டி, விலங்குகளுக்கான தீவனம், காண்டம்கள், கருத்தடை மருந்துகள், ,புத்தகங்கள், விறகு, வளையல்கள் (விலைகுறைவானவை), துடைப்பம்
 
ஐந்து சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்:
 
தேநீர், காபி, சமையல் எண்ணெய், பிராண்டட் தானியங்கள், சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பிராண்டட் பாலாடைக்கட்டி, நிலக்கரி (டன் ஒன்றுக்கு ரூ 400 லெவி உடன்), மண்ணெண்ணெய், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (எல்.பி.ஜி), உடலுக்கு நீர்ச்சத்து தரும் ஓ.ஆர்.டி, வடிவியல் பெட்டி (ஜாமெட்ரி பாக்ஸ்), செயற்கை சிறுநீரகம், கை பம்புகள், இரும்பு, எஃகு, இரும்பு கலந்த உலோகங்கள், தாமிர பாத்திரங்கள், 500ரூபாய் மதிப்புக்குள்ளான ஷுக்கள், 1000ரூபாய் மதிப்புக்குள்ளான ஆடைகள்
 
12 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்:
 
உலர் பழங்கள், நெய், வெண்ணெய்,தின்பண்டங்கள்,மாமிசம் மற்றும் மீன்,பாலால் தயாரிக்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், பயோ கேஸ், மெழுகுவர்த்தி, அனஸ்தீசியா மயக்க மருந்து, ஊதுபத்தி, பல் துலக்கும் பொடி,மூக்கு கண்ணாடி லென்ஸ், குழந்தைகளுக்கான ஓவிய புத்தகங்கள், நாட்காட்டிகள், நட்டு, போல்டு, திருகுகள்,  டிராக்டர், மிதிவண்டி, எல்.பி.ஜி விளக்கு, விளையாட்டுப் பொருட்கள், கலைப் பொருட்கள், செல்ஃபோன்
 
18 சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்:
 
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,பதப்படுத்தப்பட்ட பால், உறையவைக்கப்பட்ட காய்கறிகள்,தலையில் பூசும் எண்ணெய், சோப், ஹெல்மெட்டுகள், நோட்டு புத்தகங்கள், ஜாம்கள், ஜெல்லி, சாஸ், சூப், ஐஸ் கிரீம், உடனடி உணவு கலவைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், கணினி, பிரிண்டர், கழிவறையில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் 

28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்:
 
கார், இருசக்கர வாகனங்கள், சாக்லேட், கோகோ வெண்ணெய், கொழுப்புகள், எண்ணெய்கள், பான் மசாலா, குளிர்சாதன பெட்டி, வாசனை திரவியங்கள், டியோடரண்ட், ஒப்பனை பொருட்கள், சுவர் பட்டி, சுவருக்கான பெயிண்ட்,பற்பசை, சவர கிரீம், சவரம் செய்யும் ரேசர், திரவ சோப், பிளாஸ்டிக் தயாரிப்புகள், ரப்பர் டயர்கள், தோல் பைகள், மார்பிள், கிரானைட், பிளாஸ்டர், மைக்கா, தடிமனான கண்ணாடி, பாத்திரம் கழுவும் இயந்திரம் (டிஷ் வாஷர்), பியானோ, கைத்துப்பாக்கி


இதில் மேலும் படிக்கவும் :