சிறுவனை காப்பாற்ற சுட்டு வீழ்த்தப்பட்ட கொரில்லா


Murugan| Last Modified ஞாயிறு, 29 மே 2016 (19:19 IST)
அமெரிக்காவின் உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவின் இருப்பிடத்திற்குள் நுழைந்த சிறுவனை காப்பாற்ற பூங்கா ஊழியர் கொரில்லாவை சுட்டு வீழ்த்தினார்.

 

 
சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் இயக்குனர் தானெ மெய்நார்ட் கூறுகையில், அந்த நான்கு வயது சிறுவன் தடுப்பு வேலியை தாண்டி அகழிக்குள் விழுந்துவிட்டான் எனவும் அகழிக்குள் விழுந்த அச்சிறுவனை ஹரம்பே என்ற அந்த கொரில்லா பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டது என்றும் தெரிவித்தார்.
 
கொரில்லாவை சுட வேண்டும் என்று எடுக்கப்பட்ட இந்த முடிவு கடினமாதாக இருந்தாலும் அது ஒரு சரியான முடிவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்வத்தில் அச்சிறுவனுக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :