வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (20:43 IST)

கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார்

கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார்.


 

 
இந்தியாவில் பிறந்தவரான 43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.
 
அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன.
 
இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
 
கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரின் சொத்து மதிப்பைவிட இது இன்னும் குறைவே - அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா சுமார் 34 பிலியன் டாலர்கள் சொத்து இருப்பதாக கருதப்படுகிறது.