வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (11:08 IST)

கிளாஸ்கோ 2014: காமன்வெல்த் முதல் நாள் போட்டிகள்

20ஆவது காமன்வெல்த் விளையாட்டு விழாவின் முதலாவது நாள் போட்டிகள் 24ஆம் திகதி நடைபெற்று வருகின்றன.
 
கிளாஸ்கோ 2014- விளையாட்டு விழாவின் முதலாவது தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வீராங்கனை ஜோடி ஸ்டிம்ப்ஸன் ட்ரையாத்லன் (triathlon) போட்டியில் வென்றெடுத்துள்ளார்.
 
முதல் நாளில் 6 விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களுக்கான போட்டிககள் நடக்கின்றன.
 
அரங்க சைக்கிளோட்டம், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, நீச்சல், பளுதூக்கல், ஆகிய விளையாட்டுக்களுடன் (நீச்சல்- சைக்கிள்- பின்னர் ஓட்டம் என்று மூன்று தொடர் போட்டிகளைக் கொண்ட) ட்ரையாத்லன் (triathlon) விளையாட்டுமே இன்றைய தங்கப் பதக்கப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
 
இந்தியா பளுதூக்கல் போட்டியில் முதலாவது தங்கத்தை வென்றுள்ளது. பளுதூக்கலில் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி என மொத்தமாக இரண்டு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
 
ஜிஎம்டி நேரப்படி மாலை 5.30 மணியாகும்போது, இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
முதல் இடத்தில் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்களுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
 
ஆஸ்திரேலியா அணி 2 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 4 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
இலங்கை அணி வீரர்கள் முதல்நாள் போட்டிகளில் ஸ்குவாஷ், நீச்சல், மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
 
பிரிட்டிஷ் மாகாராணி புதன்கிழமை இரவு கிளாஸ்கோ விளையாட்டு விழாவை துவங்கி வைத்தார்.
 
ஆகஸ்ட் 3ஆம் திகதி முடிவுவிழா வரை ஸ்காட்லாந்து நகரமெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 13 அரங்குகளில் தொடர்ந்தும் போட்டிகள் நடந்து வருகின்றன.