வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (18:12 IST)

உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் வேண்டும்: ஜி 20 மாநாட்டில் அப்பாட்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆரம்பித்துள்ள ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது சம்பந்தமாக தாம் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை இரண்டு சதவீதப் புள்ளிகள் அதிகரிக்க வழி தேடினால் போதும், அதன் மூலமாக கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும், லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருள் உற்பத்தியையும் உருவாக்கிட முடியும் என்று அப்பாட் கூறினார்.
 
உலகப் பொருளாதாரத்தினை வளர்க்கின்ற சுமையை அமெரிக்காவால் தனியாக சுமக்க முடியவில்லை என்றும் எல்லா நாடுகளும் இவ்விஷயத்தில் பங்களிக்க வேண்டும் என்று அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டார்.
 
பருவநிலை மாற்றம், மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் இபோலா போன்ற மற்ற சில விஷயங்கள் பற்றியும் தாம் விவாதிக்க விரும்புவதாக ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சிலர் தெளிவுபடுத்தியுள்ளனர்.