செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 17 மே 2016 (13:20 IST)

வெற்றிகரமாக நடந்த முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.


 

 
இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
 
ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64 வயதாகும் தாமஸ் மானிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 
உலகளவில் பரிசோதனை ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை தாமஸ் மானிங் பெற்றுள்ளார்.
 
அடுத்த சில மாதங்களில் வழக்கமான சிறுநீர் கழித்தல் மற்றும் பாலியல் செயல்பாடு ஆகியவற்றை இவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மசாச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இம்மாத துவக்கத்தில் நடந்த இந்த 15 மணி நேர அறுவை சிகிச்சையில், சிறுநீரக துறை, உளவியல் சிகிச்சை , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்ற பல துறைகளிலிருந்தும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
 
ஆணுறுப்பு தொடர்பான காயங்கள் உயிருக்கு ஆபத்ததானது இல்லையென்றாலும், ''ஆணுறுப்பு தொடர்பான காயங்கள் உளவியல் ரீதியாக பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது'' என்று மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளளது.
 
தனது அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் மூலம், ஆணுறுப்பு தொடர்பான காயங்கள் குறித்து சமூகத்தில் உலவும் தேவையற்ற அச்சங்களை நீக்கவும், இது தொடர்பான பாதிப்புக்குள்ளகியுள்ள மற்ற ஆண்களுக்கு, பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீள முடியும் என்று தான் உத்வேகம் அளிக்க முடியும் என்று மானிங் நம்பிக்கை தெரிவிக்கிறார்.