Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது

புதன், 21 மே 2014 (12:11 IST)

Widgets Magazine

புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள புதிய ஆய்வு ஒன்று, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியனன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வேகத்தில் பனி உருகுவதாக தெரியவந்துள்ளது.
 
பனிப் படலத்தின் மாறும் வடிவத்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராடார் கருவியின் உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கிரியோசாட் செயற்கைக்கோள் இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
அண்டார்டிகாவில் இருக்கின்ற மொத்த பனியும் உருகினால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அண்மையில் தெரிவித்திருந்தது.
 
மிக அதிகமாக பனி உருகி வரும் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி குறித்தே விஞ்ஞானிகள் அதிக கவலை கொண்டுள்ளனர்.
 
ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

இரானிய நடிகையின் முத்தத்தால் சர்ச்சை

பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் இரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் இரானில் ...

news

செயற்கை போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது: ஐநா எச்சரிக்கை

உலகில் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஐநா மன்றம் மீண்டும் ...

news

42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு

அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை.

news

பாதிரியார்கள் மீது காதல்வயப்பட்ட பெண்கள் பாப்பரசருக்கு கடிதம்

ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் ...

Widgets Magazine Widgets Magazine