கார் நம்பர் பிளேட்டில் எமோஜிகள் - விலை எவ்வளவு தெரியுமா?

plate
Last Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:45 IST)
இந்தியர்கள் தங்களுக்கு பிடித்தமான ராசியான எண்களை பெருந்தொகை கொடுத்து கார் நம்பர் பிளேட்களில் பொறித்து கொள்வது வழக்கம். இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லேண்ட் மாகாண மக்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளனர்.
 
கார் நம்பர் பிளேட்களில் எண்கள் மட்டுமின்றி கூடுதலாக அவர்களுக்கு பிடித்தமான எமோஜியையும் வாகன உரிமையாளர் சேர்த்து கொள்ளலாம்.
 
இந்தத்திட்டம் அடுத்த மாதம் முதல் குவீன்ஸ்லேண்டில் அமலுக்கு வர உள்ளது.
 
ஆனால், எமோஜிகளை பொறித்து கொள்ள விதிக்கப்பட்டுள்ள ஒரே நிபந்தனை, நேர்மறை எண்ணம் கொண்ட எமோஜிகளை மட்டுமே பொறித்து கொள்ள அனுமதி வழங்கப்படும். எதிர்மறை எமோஜிகளை பொறிக்க முடியாது.
 
இன்னும் சொல்லப்போனால் ஐந்து வகையான எமோஜிகளை மட்டுமே இப்போதைக்கு பயன்படுத்த முடியும்.
 
இவ்வாறு பயன்படுத்தப்படும் எமோஜிகள் காரை அடையாளம் காட்டும் எண்களின் ஒரு பகுதியாக இருக்காது. நம்பர் பிளேட்களில் ஒரு ஓரமாகவே இந்த எமோஜிகள் பொறிக்கப்படும்.
01
 
இந்த புதிய திட்டம் குறித்து தங்கள் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று கூறும் குவீன்ஸ்லேண்டின் தி ராயல் ஆட்டோமொபைல் கிளப், பொதுவாக வாகன ஓட்டுநர்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டையோ அல்லது பிடித்தமான விளையாட்டு அணியின் லோகோவையோ பொறித்து கொள்வார்கள் அதற்கு பதிலாக எமோஜிகளை பொறிக்கிறார்கள் என்கிறார் கிளப்பின் செய்தி தொடர்பாளர் ரெபெக்கா மைக்கெல்.
 
ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் வைரலாகியுள்ளது. எமோஜிகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் இந்த யோசனைக்கு எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
 
இதுபோன்ற எமோஜி நம்பர் பிளேட்களை பெற எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று தெரியுமா? அமெரிக்கா டாலர்களில் சுமார் 340. அதாவது தற்போதைய நிலவரப்படி எமோஜி பொறிக்கப்பட்ட நம்பர் பிளேட்களின் இந்திய மதிப்பு 24,000 ரூபாய்.

இதில் மேலும் படிக்கவும் :