வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (21:06 IST)

பெண் சிறுத்தையுடன் சேரமுடியாதுள்ள ஆண் சிறுத்தை

இந்தியாவில் தலைநகர் டில்லியில் உள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றில் இனப்பெருக்கத்துக்காக தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட ஜாகுவார் ரக ஆண் சிறுத்தை ஒன்று பெண் சிறுத்தையுடன் 'சேரமுடியாத' அளவுக்கு அதிக பருமனாக உள்ளதால் திருப்பி அனுப்பப்படுகின்றது.


 

 
கேரளாவிலுள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றிலிருந்து கடன்-அடிப்படையில் டில்லிக்கு கொண்டுவரப்பட்ட 12- வயதான இந்த சிறுத்தையின் பெயர் சல்மான்.
 
டில்லி மிருகக்காட்சிசாலையில் உள்ள 'பெண் சிறுத்தை எவ்வளவு முயன்றும், ஆண் சிறுத்தை சல்மான் எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமல் சோம்பேறியாகவே' இருந்ததாக மிருகக்காட்சி பொறுப்பாளர் கூறுகின்றார்.
 
சாதாரண சிறுத்தைகளின் எடையை விட சல்மானின் உடல் எடை அதிகம் என்றும் நாளாந்தம் குறைந்தது 6 கிலோ எருமை இறைச்சியாவது அதற்கு வேண்டும் என்றும் டில்லி மிருகக்காட்சிசாலை கூறுகின்றது.
ஜாகுவார் ரக கரும்புள்ளி சிறுத்தைகள் உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.