1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 மே 2015 (18:36 IST)

'ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூசி பேச வேண்டும்': தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரொஹிஞ்சா இன மக்களுக்கு உதவுவதற்கு, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இந்தப் பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் தான் ஆங் சான் சூசி -இடம் பேசியிருப்பதாகவும், அது தொடர்பில் அவரால் இன்னும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே, நோபல் பரிசு பெற்றவரான தலாய் லாமா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
மியன்மாரின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாத ரோஹிஞ்சா மக்களின் பிரச்சனை தொடர்பில் ஆங் சான் சூசி பேச மறுப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் உள்ளன.
 
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் ரோஹிஞ்சாக்கள் விவகாரம் மிகவும் சிக்கலானது.
 
அங்கு சூசியின் அரசியல்கட்சி இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.