வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2014 (12:53 IST)

கொலம்பஸுக்கு முன்பே முஸ்லிம்கள் அமெரிக்கா சென்றனர்: துருக்கி அதிபர்

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே முஸ்லிம்கள் அதனைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என துருக்கி அதிபர் ரெஜெப் தையிப் எர்தோஆன் தெரிவித்துள்ளார்.


 
லத்தீன அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாடு ஒன்றில் உரையாற்றிய எர்தோஆன், 1492ஆம் ஆண்டு கொலபம்பஸ் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்ததற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பாக 1178ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் மாலுமிகள் அமெரிக்காவை அடைந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
கூபா நாட்டில் மலை மேடொன்றில் பள்ளிவாசல் ஒன்று இருந்ததை தனது நாட்குறிப்பில் கொலம்பஸ் பதிந்துள்ளார் என எர்தோஆன் கூறினார்.
 
இயற்கையாக நில அமைப்பில் தென்பட்ட ஒரு வடிவத்தை கொலம்பஸ் அவ்வாறாக உருவகப்படுத்தி சொல்லியிருந்தார் என்பதாகவே அப்பதிவு பற்றி கருதப்பட்டு வந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
வடகடல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், கொலம்பஸுக்கு கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் முன்பாக வட அமெரிக்காவுக்கு சென்றவர்கள் என பரவலாக கருதப்படுகிறது.
 
15ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவிலிருந்து பெஹ்ரிங் நீர் வழியாக அமெரிக்க கண்டத்தில் முதல் முதலாக மனிதர்கள் குடியேறினார்கள் என நம்பப்படுகிறது.