Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் வரை வரி விதித்து சீனா பதிலடி

tax
Last Modified திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:35 IST)
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதி பொருட்களை பாதிக்கும் இந்த வரி விதிப்பு திங்களன்று நடைமுறைக்கு வரும்.

அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சி இது என சீனா தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக போரை தாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்திருந்த போதிலும் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுமெனில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தது.

"வர்த்தக போர் நல்லது" என்றும் அமெரிக்காவுக்கு அம்மாதிரியான போரில் வெல்வது "எளிதான" ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன இறக்குமதி பொருட்களுக்கு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வரிகளை விதிப்பதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என வாஷிங்கடனிலிருந்து பிபிசி செய்தியாளர் கிறிஸ் பக்லர் தெரிவிக்கிறார்.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும் அளவுக்கு முறையற்ற வர்த்தக முறைகள் கடைபிடிக்கப்படுவதற்கான பதில் நடவடிக்கை இது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது அது பழிவாங்கக்கூடிய வர்த்தக போராக மாறிவிட்டதால் மேலும் பல நடவடிக்கையை எதிர்பார்க்கலாம் என செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதில் மேலும் படிக்கவும் :