வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (15:39 IST)

சுற்றுலா தலமாக மாறும் அணு விபத்து துயரத்தின் சாட்சியம்!

உலகத்தின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சுற்றுலா தலமாக மாற்றப் போவதாக உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளார்.

 
செர்னோபிலில் ஏப்ரல் 1986ல் அணு உலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஐரோப்பா முழுவதும் கதிர்வீச்சைப் பரப்பியது. ஐ.நாவின் கூற்றுபடி, 50,000 சதுர கிலோமீட்டர் நிலம் வீணாகியது. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பாதிப்பு இன்றுவரை அங்கு இருப்பதாக தெரிகிறது.
 
கதிர்வீச்சு அதிகம் இருந்தாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே செர்னோபிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, அதிபர் வாலடிமியர் செலன்ஸ்கி செர்னோபிலை சுற்றுலா தளமாக மாற்ற கையெழுத்திட்டார்.
மேலும், செர்னோபில் குறித்த எதிர்மறையான எண்ணத்தை மாற்ற நேரம் வந்துவிட்டது. மனிதன் ஏற்படுத்திய ஒரு பேரழிவுக்குப் பின் இந்த பிரபஞ்சத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த இடம் செர்னோபில் என செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
இந்த புதிய ஆணை செர்னோபிலுக்கு நீர்வழி பயணம் செய்யவும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் ஏற்படுத்துவதற்கும் திட்டம் வகுக்கும். அது மட்டுமல்லாமல் இங்கே புகைப்படம் எடுக்கும் தடை நீக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.