வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2015 (21:31 IST)

கொல்லப்பட்ட ரஷ்ய ஜார் மன்னனின் உடல் மீது மரபணு பரிசோதனை

ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னன் மற்றும் அவரது மனைவியின் உடல்களின் எச்சங்களின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகள் அந்த உடல்கள் அவர்களுடையதுதான் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதாக ரஷ்யா கூறுகிறது.
 

 
ஜார் மன்னனும் அவரது மனைவியும், 1918ம் ஆண்டில் நடந்த ரஷ்ய போல்ஷ்விக் புரட்சியின் போது புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.
 
ஜார் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஜாரினா அலெக்ஸாண்ட்ரா ஆகிய இருவரது உடலின் எச்சங்களை ரஷ்ய புலனாய்வாளர்கள் செப்டம்பர் மாதம் தோண்டி எடுத்தனர்.
 
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜார் மன்னனின் மூதாதையர்கள் ரோமனோவ் அரச குடும்பத்தினரின் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் இவர்களது உடல்களூம் அடக்கம் செய்யப்பட அனுமதிக்கும் முன்னர், இந்த உடல்கள் உண்மையில் இவர்களதுதானா என்பது குறித்து உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய ரஷ்ய ஆர்த்தொடாக்ஸ் திருச்சபை, இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.