வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (21:50 IST)

அமெரிக்க போயிங் விமான தொழிற்சாலை சீனாவுக்கு வருகிறது

அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங், சீனாவில் தனது தொழிற்சாலை ஒன்றை திறக்கவுள்ளது.
 

 
இந்த தொழிற்சாலை சீன அரசுக்கு சொந்தமான பயணிகள் விமான கூட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளது.
 
புதிய தொழிற்சாலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 737 விமானங்களை பொருத்துதல் மற்றும் நிறம் பூசுதல் போன்றவற்றைச் செய்யும்
 
சுமார் 38 பில்லியன் டாலர்கள் பெறுமதியான, 300 ஜெட் விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு சீன நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.
 
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க வாஷிங்டன் மாநிலத்திலுள்ள போயிங் விமான நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
இந்த திட்டமானது அமெரிக்காவில் பலர் தமது தொழிலை இழக்க வழிவகுக்கும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை போயிங் நிறுவனம் மறுத்துள்ளது.