1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (20:12 IST)

பீகாரில் பள்ளித் தேர்வில் முறைகேடு : மாணவிக்கு சிறை

பள்ளித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாற்காக பள்ளி மாணவி ஒருவர் இரு வாரம் சிறைக்கு அனுப்பட்டுள்ள சம்பவம் இந்திய மாநிலமான பீகாரில் நடந்துள்ளது.
 

 
அனைத்து பாடங்களிலும் முதல் இடத்தில் வந்த 17 வயதான ரூபி ராய், மறு தேர்வின் போது தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
 
வீடியோ ஒன்றில், அரசியல் அறிவியல் பாடத் திட்டத்துக்கான வார்த்தையை சரியாக எழுத்துக் கூட்ட முடியாமல் திணறிய ரூபி ராய், அது சமையல் தொடர்பான பாடம் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்து, ரூபி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
முதல் தரவரிசையில் இடம்பெற்ற மற்ற மாணவர்களுக்கும் கைது ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேடு காரணமாக, இந்த மாதம் முன்னதாக பீகார் மாநில பள்ளித் தேர்வு வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 
வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற விஷயமாக உயர்நிலை தேர்வுகள் பார்க்கப்படுவதால், இதில் தேர்ச்சி பெற வேண்டிய பெரும் அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகிறார்கள்.