வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (18:29 IST)

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்

பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது.


 

 
குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார்.
அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் என்று உள்ளூர் முஸ்லீம் மதகுரு ஒருவர் அத்தாட்சிப்பத்திரம் வழங்கிய பின்னர் , அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
 
இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு அவரை கொன்றுவிட்டதாக அறிவித்திருந்தது. ஆனால் பங்களாதேஷ் அரசு இஸ்லாமிய அரசின் இந்தக் கூற்றை மறுத்தது.
 
கோஷி விவசாய நிலம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவருக்கு வயது 66.
ஜப்பானில் உள்ள அவரது குடும்பத்தினர் அவரது உடலைத் திரும்பப் பெற மறுத்துவிட்ட நிலையில், அவரை இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்ய ஜப்பானிய தூதரகம் கோரியிருந்தது என்று செய்திகள் கூறியிருந்தன.