Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுந்தரவனக்காடு எண்ணெய்க் கசிவால் டால்பின்கள் இறக்கின்றனவா?

ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:11 IST)

Widgets Magazine

வங்கதேசத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காட்டில் எண்ணெய்க் கப்பல் ஒன்று மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஒரு டால்பின் செத்துக்கிடக்கும் புகைப்படம் ஒன்றை வங்கதேச செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
 
சுந்தரவனக்காடு எண்ணெய்க் கசிவால் டால்பின்கள் இறக்கின்றனவா?
இந்த குறிப்பிட்ட டால்பின் இறந்ததற்கான காரணம் என்ன என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த எண்ணெய்க்கசிவால் அந்த பகுதியில் வாழும் டால்பின்கள் உள்ளிட்ட அரிய வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்கள் குறித்த அச்சங்களை இந்த செய்தியும் புகைப்படமும் அதிகரித்திருக்கிறது.
 
மூன்று லட்சத்துக்கும் அதிகமான அடர்த்தியான பெட்ரோலிய எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் வேறொரு கலத்துடன் மோதிக்கவிழ்ந்ததில், அதில் இருந்த எண்ணெய் அனைத்தும் சுந்தரவனக்காட்டின் நீரில் கசிந்தது.
 
இப்படி சுந்தரவனக்காட்டு நீர்நிலையில் சிந்தியிருக்கும் எண்ணெயை கைகளால் அப்புறப்படுத்துவதில் உள்ளூர் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கைக்கு கிடைத்த பானை, பாத்திர பண்டம் அனைத்தையும் பயன்படுத்தி அவர்கள் இந்த எண்ணெயை நீரில் இருந்து பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

நிறுவன தலைவரின் மகளால் முட்டியிடச் செய்யப்பட்ட விமானச் சிப்பந்தி

கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, ...

news

இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரை வென்றது இலங்கை

இலங்கை அணியின் குமார் சங்ககாரவின் சதம் காரணமாக அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒரு ...

news

தாய்லாந்து இளவரசரின் மனைவி அரச பதவியைத் துறந்தார்

தாய்லாந்து நாட்டின் பட்டத்து இளவரசரான வஜிரலாங்கோர்னின் மனைவியான ஸ்ரீ ராஷ்மி தனது அரச ...

news

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக் கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய ...

Widgets Magazine Widgets Magazine