வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: ஞாயிறு, 27 ஜூலை 2014 (20:34 IST)

காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பெரிய பெரிய பீரங்கி குண்டுச் சத்தங்களைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

 
நிறைய ஷெல் குண்டுகள் வந்து, மீண்டும் விழ ஆரம்பித்துள்ளன.
 
இஸ்ரேலிய ஷெல் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்த நிலையில், மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இருபத்து நான்கு மணி நேரங்களாக நேற்றைய மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தத்தை நீடிக்க இஸ்ரேல் சம்மதித்திருந்தாலும் ஹமாஸ் அதனை நிராகரித்துவிட்டு காசாவிலிருந்து இஸ்ரேல் அதன் மீது ரொக்கெட் வீச ஆரம்பித்திருந்தது.
 
இஸ்ரேலிய துருப்பினர் பாலஸ்தீன நிலப்பரப்பில் இருக்கும் வரையில் தாம் சண்டையை நிறுத்தப் போவதில்லை என்று ஹமாஸ் கூறியிருந்தது.
 
நேற்றிரவு மோர்டார் தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
2014 ஜூலை 8 ஆம் தேதி ஆரம்பித்திருந்த மோதல்களில் சிவிலியன்கள் பெரும்பான்மையாக ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.