வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (16:40 IST)

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆரம்பிக்க ஆசிய நாடுகள் ஒப்பந்தம்

சீனாவும் வேறு 21 ஆசிய நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆசியாவுக்கான புதிய வங்கி ஒன்றை உருவாக்க சம்மதித்துள்ளனர்.

 
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற இந்த வங்கியை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் பெய்ஜிங்கின் மக்கள் மாமன்றத்தில் நடந்த ஒரு வைபவத்தில் கையெழுத்தாகியது.
 
சைந்தியா, கத்தார் ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
 
போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைதொடர்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியைஆசியாவின் வறிய நாடுகளுக்கு பெற்றுக்கொடுப்பது இந்த வங்கியின் நோக்கம்.
 
இந்த வங்கித் திட்டத்தில் சேர வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது என்பதால், அதன் நெருங்கிய தோழமை நாடுகளான தென்கொரியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த ஒப்பந்தத்தில் சேரவில்லை.