வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 21 மே 2015 (18:22 IST)

குடியேறிகளை தேடி மீட்குமாறு மலேஷிய பிரதமர் உத்தரவு

கடலில் நிர்க்கதியாகியுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளைத் தேடிக் கண்டுபிடித்து மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக் கூறியுள்ளார்.
 

 
கடலில் படகுகளில் நிர்க்கதியாகியிருக்கும் குடியேறிகளில் பெரும்பாலானவர்கள் மியன்மாரையும் வங்கதேசத்தையும் சேர்ந்தவர்கள்.
 
படகுகளில் உள்ள குடியேறிகளை தங்களின் நாடுகளுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று மலேஷியாவும் அதன் அண்டை நாடுகளும் முன்னர் மறுத்துவந்திருந்தன.
 
ஆனால் குடியேறிகளின் நிலைமை மோசமடைந்துவருகின்ற சூழ்நிலையில், அந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.
 
குடியேறிகள் தற்காலிகமாக தங்கள் நாடுகளில் தங்குவதற்கு அனுமதி வழங்குவதாக மலேஷியாவும் இந்தோனேஷியாவும் இணங்கியுள்ளன.
 
மியன்மார் அதிகாரிகளுடனும் மலேஷிய மற்றும் இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவருகின்றனர்.
 
மியன்மாரிலிருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஒடுக்குமுறை காரணமாக தப்பிவருவதாக கூறப்படுவதை அந்நாடு மறுக்கின்றது.
 
இதனிடையே படகுகளில் வரும் ரோஹிஞ்சா குடியேறிகளை தங்கள் நாட்டுக்குள் குடியேற அனுமதிக்கப் போவதில்லை என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.