வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (13:40 IST)

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
 

 
இந்த குண்டுவெடிப்பு, ஒரு வங்கிக்கு வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தற்கொலைத் தாக்குதல் மூலம் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அரசு ஊழியர்களும் ராணுவ வீரர்களும் தங்களது ஊதியத்தைப் பெறுவதற்காக நியு காபூல் பேங்க் என்ற அந்த வங்கிக்கு வெளியில் காத்திருந்தனர்.
 

 
சனிக்கிழமையன்று காலையில் ஜலாலாபாதில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
 
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.