வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (19:06 IST)

சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 21 பேர் பலி

வடகிழக்குச் சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். ஒருவரைக் காணவில்லை என அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.


 
 
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஜிக்ஸி சிடியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இந்த சுரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று தீப்பிடித்தது.22 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பதாக முன்னதாகக் கூறப்பட்டது. இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
 
சீனாவில் உள்ள சுரங்கங்களில் பல அபாயகரமான சூழலில் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அங்கு உள்ள சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால், சமீப காலமாக பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்த ஆரம்பித்திருப்பதால் சுரங்க பாதுகாப்பு என்பது மேம்பட்டுவருகிறது.
 
தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்தில் 38 தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். அவர்களில் 16 பேர் தப்பித்துவெளியில் வந்துவிட்டனர் என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது தீ கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 54 பேர் கொல்லப்பட்டனர்.