வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (21:36 IST)

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்க 7 கோடி டாலர் திட்டம்

ஆஸ்திரேலியாவில் வீடுகளில் குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை தேசத்துக்கே ஒரு அவமானம் என்று கூறியுள்ள அந்நாட்டின் புதிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அப்பிரச்சினையை சமாளிப்பதற்கென 7 கோடி டாலர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
 

 
வீட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
 
தப்பு செய்பவர்களை கண்டுபிடிப்பதற்கான ஜிபிஎஸ் சேவையை நடத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் அழைப்பதற்கான தொலைபேசி சேவையை நடத்துவதற்கும், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பிற வசதிகளை அமைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
 
ஆஸ்திரேலியாவில் ஆறில் ஒரு பெண், தன்னோடு வாழும் ஒருவரால் அல்லது முன்பு வாழ்ந்த ஆண் ஒருவரால், உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாகியுள்ளார் என்று மதிப்பிடப்படுகிறது.
 
ஆச்திரேலியாவில் இந்த ஆண்டில் மட்டும் தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரால் அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.