1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (06:57 IST)

12 வயதுக்கு முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்

பிரிட்டனில் பிபிசியின் ஆய்வொன்றில் கலந்துகொண்ட இளைஞர்களில் நால்வரில் ஒருவர், தாம் 12 வயதை எட்ட முன்னரே இணையதளத்தில் பாலியல்- ஆபாச படங்களைப் பார்த்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள 16 வயது முதல் 21 வயது வரையான 1000 இளைஞர்களிடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
 
'ஆபாசப் படங்கள்: அவற்றின் பாதிப்பு என்ன?' என்ற தலைப்பிலான பிபிசியின் தொலைக்காட்சி ஆவணப் படத்திற்காக இந்த இளைஞர்களிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
 
கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள், இணையதள ஆபாசப் படங்கள் தமது பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகளை பாதித்துள்ளதாக கவலைப்பட்டுள்ளனர்.