ஹாங்காங்கில் பறவைக்காய்ச்சல்: ஆயிரக்கணக்கான கோழிகள் பலி

FILE

கடந்த வருடம் வெளிப்பட்ட ஹெச்7என்9(H7N9) என்ற வகைக் கிருமி , 200க்கும் அதிகமான மக்களை பாதித்து டஜன் கணக்கான மக்களை கொன்றுள்ளது.

மூன்று வருடங்களில் முதல் முறையாக நடக்கும், இந்த அதிக எண்ணிக்கையில் கோழிகள் கொல்லப்படும் நடவடிக்கை, எதிர்வரும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக வருகிறது.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கோழிகள் தான் பெரும்பாலும் உணவாக உண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மூன்று வாரங்களுக்கு , சீனப் பெருநிலப்பரப்பிலிருந்து, கோழி இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் அதே வேளை, இருபதாயிரம் கோழிகள் வரை அழிக்கப்படும்.
Webdunia| Last Updated: செவ்வாய், 18 பிப்ரவரி 2014 (12:08 IST)
சீனப் பெரு நிலப்பரப்பிலிருந்து வந்த கோழி இறைச்சித் துண்டு ஒன்றின் மீது நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் பறவை காய்ச்சலின் ஒரு கொடிய புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங்கில் பெரிய அளவில், அதிக எண்ணிக்கையில் கோழிகள் கொல்லப்பட்டுவருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :