Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சக மனிதர்களால் காரியத்தடை ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

வியாழன், 17 டிசம்பர் 2009 (17:35 IST)

Widgets Magazine

இன்றைய மின்னஞ்சல் யுகத்திலும் சிலர் சகுனங்களைப் பின்பற்றுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட மனிதரைப் பார்த்தால் சென்ற காரியம் வெற்றியடையாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது ஏற்புடையதா?

பதில்: காரிய நிமித்தமாக ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குறிப்பிட்ட நபர் அவர் எதிரில் வந்தால், சென்ற காரியம் சித்தியடையாது என சம்பந்தப்பட்டவர் மனதில் கருதுவார். ஆனால் அவருக்கு காரியத்தடை ஏற்படுத்தும் சக மனிதரால் மற்றவர்களுக்கு காரியத்தடை ஏற்படாது.

எனவே, குறிப்பிட்ட நபரால் அனைவருக்கும் தடங்கள் ஏற்படுவதில்லை. மாறாக ஒரு நபருக்கு மட்டுமே காரியத்தடை ஏற்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நபரை அதிர்ஷ்டமற்றவர் எனக் கருத வேண்டியதில்லை.

செஞ்சிக்கு அருகே உள்ள கிராமத்தில் எனக்குத் தெரிந்த பால்ய நண்பர் ஒருவர் வசிக்கிறார். அவரைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டிலேயே நீண்ட நேரம் இருந்ததால், நிலத்திற்கு (வயல்) சென்று வரலாம் என்று கூறினேன். அவரும் உடையை மாற்றிக் கொண்டு என்னுடன் ஆவலாகப் புறப்பட்டார்.

ஆனால் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற சமயத்தில், எனது நண்பருக்கு தெரிந்தவர் எதிரே வந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திய பின்னர், வயலுக்கு செல்ல வேண்டாம்; வீட்டிற்கு திரும்பலாம் என என்னிடம் கூறினார். நான் ஏனென்று கேட்டேன். அதற்கு எதிரே வந்த நபர் எனது நண்பர் என்றாலும், அவரைப் பார்த்து விட்டுச் சென்றால் எந்தக் காரியமும் நடக்காது என்றார். ஆனால் நான் மிகவும் வற்புறுத்தி அவரை வயலுக்கு அழைத்துச் சென்றேன்.

வயலுக்கு சென்ற பின்னர் அங்கிருந்த பனை மரத்தில் இருந்து நுங்கு பறிக்கலாம் என்று கூறினேன். ஆனால் எனது நண்பர் நீண்ட நேரம் யோசித்த பின்னரே தனது வயலில் இருந்த பணியாளரிடம் மரத்தில் ஏறச் சொன்னார்.

மரத்தில் ஏறிய நபர் நுங்கு குலையை வெட்டும் போது எதிர்பாராத விதமாக அரிவாள் அவரது விரலைப் பதம் பார்த்தது. இதையடுத்து அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போதுதான் எனது நண்பர், எதிரில் வந்த நபரைப் பற்றி எனக்கு நினைவுபடுத்தியதுடன், அவரால்தான் வயலில் வேலை செய்தவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். இதனை என்னால் மறுத்துப் பேச முடியவில்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே எனது நண்பருக்கு உணர்த்திய நபரை, விரும்பத்தகாதவராக கருதக் கூடாது. ஏனென்றால் பின்னர் நடக்கும் அசம்பாவிதங்களை தனது வருகையின் மூலம் முன்பே எடுத்துக் கூறும் நபராக அவர் திகழ்கிறார்.

ஒருவர் காரிய நிமித்தமாக வெளியே செல்லும் போது சில வளர்ப்பு பிராணிகள், பறவைகள் எதிரே வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றிக் கூட சகுன ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

‌ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன்!

ஜோ‌திட‌த்‌தி‌ன் வா‌யிலாக சமூக, அர‌சிய‌ல், பொருளாதார போ‌க்குகளை து‌ல்‌லியமாக மு‌‌ன் ...

7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு, பணம் புரளும் என்றாலும் ...

8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும்.

9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும்.

Widgets Magazine Widgets Magazine