Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்குமா?

Widgets Magazine

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்று சொல்கிறார்களே. உண்மையா?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கும். சிலர் அல்லே லுயா என்று சொல்வதால் மரண பயம் நீங்குகிறது என்று சொல்கிறார்கள். சிலர் இன்ஷா அல்லா என்று சொன்னால் மரண பயம் விலகுகிறது என்கிறார்கள். சிலர் ஓம் நமச்சிவாய சொல்வதால் விலகுகிறது என்கிறார்கள். இன்னும் சிலர், சுப்பிரமணியம் சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று 3 முறை சொன்னால் எந்தப் பிரச்சனை வந்தாலும் எனக்கு விலகிவிடும் என்று சொல்கிறார்கள்.

இதற்கெல்லாம், அவர்களை இயக்கக்கூடிய கிரகத்தை நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு கிரகம் முக்கிய கிரகமாக இருக்கும். அந்த கிரகம்தான் நாம் எந்த அவதாரத்தை வழிபட வேண்டும் என்பதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுபவர்களையும் பார்க்கிறோம். அங்கிருந்து மீண்டும் தாய் மதத்திற்கே வருபவர்களையும் பார்க்கிறோம். இராகு திசை, சனி திசை நடக்கும் போதெல்லாம் இந்த மாதிரியான முரண்பாடுகள் உண்டாகும்.

அமைதியைத் தேடி, அங்கே போனால் நன்றாக இருக்கும், இங்கே போனால் நன்றாக இருக்கும், அந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது, இந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது நடக்கும் எ‌ன்று ந‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதனால், அவரவர்களுடைய தசா புத்தியைப் பொறுத்து சிலதெல்லாம் மாறுபடும். அதனால், ஒருத்தருக்கு பஜகோவிந்தம் மரண பயத்தை விலக்கலாம். ஆனால் எல்லோருக்கும் மரண பயத்தை விலக்குமா என்று சொல்ல முடியாது. அதனை நாம் ஈடுபாட்டுடன் சொல்ல வேண்டும். அந்த ஈடுபாடு எதை வைத்து வரும் என்பது நம்முடைய கிரகத்தைப் பொறுத்துதான் வரும்.

சுக்ரன், புதன் எல்லாம் வைணவ கிரகம் என்று சொல்கிறோம். வைணவ எண்ணங்களைத் தூண்டக்கூடிய கிரகங்கள். குரு, செவ்வாய் எல்லாம் சைவ எண்ணங்களை, சைவக் கடவுள்களைத் தூண்டக்கூடிய கிரகங்கள். இதில் எது மேலோங்கி இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பார்த்துதான் இதெல்லாம் அமையும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

‌ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன்!

ஜோ‌திட‌த்‌தி‌ன் வா‌யிலாக சமூக, அர‌சிய‌ல், பொருளாதார போ‌க்குகளை து‌ல்‌லியமாக மு‌‌ன் ...

7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு, பணம் புரளும் என்றாலும் ...

8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும்.

9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும்.

Widgets Magazine Widgets Magazine