துலாம் ராசியில் சூரியன், புதன் இருப்பது நல்லதா?

Webdunia|
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பொதுவாக துலாம் ராசியில் சூரியன் நீச்சமடையும் என்று கூறுவர். அதற்குக் காரணம் துலாம் (ஐப்பசி) மாதத்தில் அடைமழை பெய்யும். மேகங்களால் சூரியன் சூழப்படும் மாதம் ஐப்பசி. இதனால் சூரியன் அப்போது வலுவிழப்பதால் நீச்சமடைகிறது.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தாலும் ஐப்பசியில் சூரியன் கதிர்களை மேகங்கள் மறைக்கும். எனவே துலாத்தில் சூரியன் இருப்பது அவ்வளவு சிறப்பல்ல என்று ஜோதிடம் கூறுகிறது.
ஆனால், சூரியனுடன், துலாத்திற்கு உரிய கிரகமான சுக்கிரன் இருந்தால் அது நீச்சபங்க ராஜயோகமாக மாறிவிடும். இதேபோல் எந்த வீட்டில் சூரியன் இருந்தாலும், அதனுடன் புதன் சேர்ந்தால் அது நிபுணத்துவ யோகத்தை வழங்கும். இதனை ‘புதாதித்ய யோகம’ என்றும் சில நூல்கள் கூறுகிறது.

இந்த வாசகர் லக்னத்திற்கு 3வது வீட்டில் சூரியன், புதன் சேர்க்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் இவர் சிம்ம லக்னத்தை உடையவர் என்று தெரிகிறது.
சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதியும், பிரபல யோகாதிபதியாகவும் சூரிய பகவான் வருகிறார். அவர் நீச்சம் பெற்றுள்ளதால் உடல் பலவீனமாகும். உணர்ச்சி வசப்பட்டு பேசக் கூடியவராக இருப்பார். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து விட்டு பின்பு வருந்தக் கூடிய நிலையும் இவருக்கு ஏற்படும்.

ஆனால் புதன், சூரியனுடன் இணைந்துள்ளதால் இவருக்கு கெடு பலன்கள் குறையும். அதிகளவில் பாதிப்பு ஏற்படாது. எனவே இவர் தைரியமாக இருக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :