Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கா‌ங்‌கிர‌‌ஸ்: அ‌ன்னா ஹசாரே பா‌தி‌ப்பு தொடருமா?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஊழலிற்கு எதிராகப் போராடிவரும் அன்னா ஹசாரேயின் பிரச்சாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதுபோ‌ன்ற, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அன்னா ஹசாரேயின் பாதிப்பு எதிர்காலத்திலும் இருக்குமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியினுடைய ஜாதகத்தில் தற்பொழுது 4வது இடத்தில் சனி இருக்கிறார். த‌ற்பொழுது அவரு‌க்கு அ‌ர்தா‌ஷ்டம‌ச் ச‌னி நட‌க்‌கிறது. அஷ்டமச் சனியில் பாதியைத்தான் அர்தாஷ்டமச் சனி என்று சொல்வார்கள். அதனால் அவர்களுடைய கிரக அமைப்பு பிரகாரமும் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவி வருகிறது. மேலும் அன்னா ஹசாரேயினுடைய பிரச்சாரமும் ஒரு காரணம்.
ஏனென்றால் சனி பகவான் கல்வியாளர்களுக்கு உரிய கிரகமான புதன் வீட்டில் இருப்பதால் படித்தவர்கள், பண்பாளர்கள், சிந்திக்கக்கூடியவர்கள், தன்னைச் சுற்றி எது நடந்தாலும் கண்டுக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் புதனுக்கு கிடையாது. அதாவது தவறை தட்டிக்கேட்டக் கூடிய எண்ணத்தைத் தூண்டக்கூடிய கிரகம் அது. அதனால் காங்கிரஸ் கட்சியினுடைய வீழ்ச்சி தொடருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :