Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அரவாணிகளிடம் ஆசி பெறுவதை நல்லதாகச் சிலர் கருதுகிறாரகள். இது சரியா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. என்னுடைய தாத்தா வைத்திருந்தார். அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு நிலை எனப்படும் அர்த்தணாரீஸ்வரர் நிலை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் பார்த்தால், அரவாணிகளை பலி கொடுத்து கிருஷ்ணர் சிலவற்றை செய்ததாக இருக்கிறது. சிலரையெல்லாம் அழிப்பதற்கு அரவாணிகளால் முடியும். சில அரக்கர்கள் ஆணாலும், பெண்ணாலும் அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்குவார்கள். அதுபோன்றவர்களை அரவாணிகளை வைத்துதான் செய்ய முடியும். யாராலும் செய்ய முடியாத சில விஷயங்களை அரவாணிகளால் செய்ய முடியும்.
சில கடைகளில் காசு வாங்கிக் கொண்டு திருஷ்டி சுற்றி, கையை கீழே குத்தி மளமளவென்று திருஷ்டி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இதுபோன்று செய்வதால் கண் திருஷ்டி, ஓம்பல் விலகுவதாக கருதுகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :