Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம்?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பெண்களுக்கு 23 வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இது ஜோதிடப்படியான கணக்கா? அப்படியானால், ஆண்களுக்கு எத்தனை வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும்?

ஜோ‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌‌த்யாதர‌ன்: இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும் சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் எல்லாம் பார்ப்பதில்லை.

அதனால், முன்பைவிட தற்பொழுது பாலுணர்வு அதிகரித்துள்ளது சிறுவர்களிடம். அதனால்தான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும், பாலியல் குறித்த பாடம் கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும் இராகுவினுடைய காம்பினேஷனில் வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும் வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும். அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும்.
ஆண்களுக்கு?

ஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண்ணாக வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :