Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்ணா அசாரே உருவா‌க்‌கியு‌ள்ள இய‌க்க‌ம்...

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஊழலுக்கு எதிராக அண்ணா அசாரே உருவாக்கியுள்ள ஒரு இயக்கத்தால் லோக்பால் சட்ட வரைவு உருவாக்கக் கூடிய நிலை இருக்கிறது. ஆனால், அண்ணா அசாரே கூட இருந்தவர்கள் மீதெல்லாம் தற்பொது குற்றச்சாற்றுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அண்ணா அசாரே ஏற்படுத்திய இயக்கம் எப்படிப்போய் முடியும்?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது இதுபோன்ற இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றி வலுவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஊழலிற்கு எதிரான மக்கள் போக்கு பரவலாகவே மிகப்பெரிய வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

தற்பொழுது வேண்டுமானால், கூட இருப்பவர்கள் மீது குற்றம் சுமத்தி, அவருடன் இருக்கும் இவரும் சரியில்லை என்று திசை திருப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், இதையெல்லாம் அழித்துவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் எதுவுமே கிடையாது.
அதனால், அந்த இயக்கம் மேலும் வலுவடையும். ஒருத்தர் இல்லையென்றாலும், இன்னொருத்தர் வந்து தலைமை தாங்கி நடத்தக்கூடிய அளவிற்கு புரட்சிகரமான அமைப்பு உள்ளது. அதனால் ஊழலிற்கு எதிரான புரட்சிகள் மேலும் அதிகரிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :