வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: புதன், 9 டிசம்பர் 2015 (17:47 IST)

மெனோபாஸ் சவாலை சமாளிப்பது எப்படி என்பதை பார்ப்போம்

மெனோபாஸ் என்பது பெண்ணின் கருவுறும் திறன் முடிவடையும் பருவத்தில் உள்ள பெண்களின் நிலைத்தான் இது. இந்த பெண்கள் வியாதியால் பாதிகப் பட்டவர்கள் அல்ல.
 

 

 
இந்த பருவத்தை நெருங்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா? அல்லது, இந்த பருவத்தை இப்போது எதிர்பார்க்கிறீகளா? எப்படி இருந்தாலும் சரி, நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
 
மெனோபாஸ் பல பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போது தொடங்குகிறது. எதிபாராத சமயங்களில் திடீரென்று வரலாம். அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இரத்தபோக்கு ஏற்படலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் சட்டென நின்றுவிடலாம்.
 
மெனோபாஸ் பருவம்:
மெனோபாஸ் கைபுக் ஒவ்வொரு பெண்ணின் மெனோபாஸ் அனுபவமும், வித்தியாசமாக இருக்கும் என்கிறது. அந்த சமயத்தில் பெண்கள் பொதுவாக எதிப்படும் அசௌகரியங்களில் ஒன்றுதான் ஹாட்ஃபிளாஷ்.

ஹாட்ஃபிளாஷ் என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போன்ற சி ஏற்படும். ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இல்லாததால் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

இதனால் கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி, மாறி தாக்கும். கவனச்சிதறலும், ஞாபக மறதியும்கூட ஏற்படும் இந்த எல்லா அறிகுறியும் ஒருவருக்கே வரும் என்று சொல்ல முடியாது என்கிறது த மெனோபாஸ் புக்.
 
எப்படி சமாளிப்பது:
அசௌகரியங்களைச் சமாளிக்க உடற்பயிற்சி செய்வதும், அடிக்கடி மூடு மாறுவதையும் தவிர்க்கும் மேலும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
 
மனம்விட்டு பேசுங்கள்:
உங்க வேதனையை யாருக்கிட்டையும் சொல்லாமல் தனியா தவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க குடும்பத்தார்கிட்ட நடந்துக்கிரீங்கனு அவர்கள் புரிஞ்சிக்கிட்டாங்கன்னா அதிகமா கவலைபட மாட்டாங்க. இப்படி செய்யும் போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும், கரிசனையோடும் நடந்துகொள்வார்கள்.
 
மெனோபாஸ் கடக்கும் மற்றும் கடந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல கவனம் செலுத்தினால் புது தெம்போடு இன்னும் அநேக ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம்.
 
சவாலை சந்திப்போம்.... வெற்றியும் பெறுவோம் தோழிகளே.......