1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2017 (06:38 IST)

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் 122 எம்.எல்.ஏக்களின் நிலை என்ன?

மக்களின் விருப்பத்திற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதாக உளவுத்துறை தகவல் கூறியுள்ளதாம். இதனால் 98 எம்.எல்.ஏ-க்கள் இன்னும் சென்னையை விட்டுப் போகவில்லை என்று கூறப்படுகிறது.




ஒருசிலர் தங்கள் ஆதரவாளர்களையே பொதுமக்களாக்கி அவர்களுக்கு அவர்களே வரவேற்பு கொடுத்து நிலைமையை சமாளிக்கின்றார்களாம். ஆனாலும் மறந்தும்கூட தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ ஆபீஸ் பக்கம் போகவில்லை. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 90 எம்.எல்.ஏக்கள் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில்தான் ‘டேரா’ போட்டிருக்கிறார்கள். பலர் பழைய போன் எண்ணையும் மாற்றிவிட்டார்கள்.
மேலும் தொகுதிக்கு செல்ல வேண்டிய நிலை வந்தால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புத் தந்தால் நல்லது’ என்று எடப்பாடியிடம் வற்புறுத்தி வருகிறார்களாம் அந்த எம்.எல்.ஏக்கள்