இனிமே நாங்கதான் ; மூன்று மாதத்தில் தெரியும் : தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி


Murugan| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (10:52 IST)
தமிழகத்தில் அதிமுகவிற்கு மாற்றுக்கட்சி பாஜகதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி நடத்தப்பட்ட கண்காட்சியில் அவரின் படம் கிழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தற்போது அதிமுகவிற்கு மாற்றுக்கட்சி இல்லை, பாஜகதான் இனிமேல் மாற்றுக்கட்சியாக செயல்படும். அது இன்னும் 3 மாதத்தில் தெரியவரும்” என அவர் தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :