ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?

ops sasi" width="600" />
sivalingam| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:31 IST)
122 எம்.எல்.ஏக்களை கஷ்டப்பட்டு கூவத்தூரில் பூட்டி வைத்து ஒருவழியாக சசிகலா அணியினர் ஆட்சி அமைத்தாலும் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம் இருப்பதாகவே கருதப்படுகிறது.


 


5 எம்.எல்.ஏக்கள் அணி மாறினாலே ஆட்சி அவ்வளவுதான் என்று இருக்கும் நிலையில் தற்போது ஆறு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தூது விட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர்கள் அணி மாற தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி அமைந்தாலும் இன்னும் பல எம்.எல்.ஏக்களால் தங்கள் சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியவில்லை. மக்களின் ஆதரவு இல்லாத அரசில் இனியும் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் அணி மாறவுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஒரு காவிவேட்டி நபர் ஒருவர் சசிகலா அணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்டால் ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் ஆகும் அளவுக்கு எம்.எல்.ஏக்களின் அணிமாற்றம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :