வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (17:05 IST)

அ.தி.மு.க செயலாளராக மீண்டும் செந்தில் பாலாஜி?: உள்ளாட்சி தேர்தலில் ஜெ வியூகம்

அ.தி.மு.க செயலாளராக மீண்டும் செந்தில் பாலாஜி?: உள்ளாட்சி தேர்தலில் ஜெ வியூகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குறிவைத்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக மீண்டும் செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்திய அளவில் முதல்வர் ஜெயலலிதாவிற்காக பல்வேறு தொண்டுகள் மட்டுமில்லாமல் உடல் தானத்தை கொடுத்து மிகவும் பிரபலமானவர் செந்தில் பாலாஜி. பின்னர் இவர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வகித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கின்னஸ் உலகளவில் இரத்ததானம் நடத்தி சாதனை படைத்தார். 
 
இதையெல்லாம் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு போட்டிகளையும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பல போட்டிகளையும் நடத்தினார். 
 
மேலும் இந்திய அளவில் போக்குவரத்து பயணிகளுக்காக ரூ.10 மதிப்பில் அம்மா வாட்டர் திட்டத்தையும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற போது, ஏராளமான அக்னிசட்டிகள், அங்கப்பிரதட்சனம், பால்குடம், தீர்த்தக்குடம், தலைமுடி எடுத்தல் உள்ளிட்ட அம்மன் சன்னதிகளையும் விட்டு வைக்காமல் பூஜைகள் நடத்தினார். 


 

 
பூஜைகளோடு, அவரே முதல்வர் ஜெயலலிதாவிற்காக அக்னி சட்டி எடுத்தார். தலைமுடியை காணிக்கையாக்கினார்., அங்கப்பிரதட்சனம் செய்தார். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்காக நடைபெற்ற இந்த யாகங்கள் அனைத்து செய்திகளும் ஊடகங்கள் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கே சென்றன.
 
இந்நிலையில் சிறுவயதிலேயே நம்மிடம் அனுமதி வாங்காமல் கூட இப்படி செந்தில் பாலாஜி செய்வது, நம்மை கட்சியை விட்டு ஓரங்கட்டி விடுவார்கள் என்று, இங்குள்ள தம்பித்துரையின் நேரடி பார்வை இவர் மேலே பட, கொஞ்சம், கொஞ்சமாக காயை நகர்த்தப்பட்டது.


 

 
எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே நான் கட்சியில் உள்ளேன், அம்மா சிறைவாசத்தின் போது என் பெயர் கூட வரவில்லை, சிறு பையன் செந்தில் பாலாஜி பெயர் அடிபடுகின்றதே? என்று தம்பித்துரை நினைத்து வெதும்பினார். 
 
ஆனால் இதே தம்பித்துரை, வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக ஆங்காங்கே கரூர் பாராளுமன்ற தொகுதிகளான நான்கு மாவட்டங்களான கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி என்று மூன்று சட்டமன்ற தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஆகிய 4 மாவட்டங்களிலிருந்து 6 சட்டமன்ற தொகுதிகள் வருவதால், அப்போது அவர் அமைச்சர் மட்டுமில்லாமல் கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்த நிலையில் ஆங்காங்கே அனல்பறக்கும் பிரச்சாரத்தை செந்தில் பாலாஜி மேற்கொண்ட நிலையில் தம்பித்துரைக்கு எதிர்ப்பு வலுத்தது. 


 

 
ஆனால், பிரச்சினைக்குரியவர்களின் கால்களில் விழுந்து எனக்காக அம்மா, அப்பா, சகோதரா.. என்று கூறி வாக்குகள் சேகரித்தார். மேலும் பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டபோது, தமிழக அளவில் அதிக கூட்டம் மட்டுமில்லாது பிரச்சார பந்தலை சிறப்பாக அலங்கரித்தது முதல்வர் ஜெயலலிதாவையே மிகவும் உற்சாகப்படுத்தியதோடு, பிரச்சார பந்தலிலேயே முதல்வர் ஜெயலலிதா அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டினார். 
 
இந்த பாராட்டை கூட்டணி கட்சி தலைவர்களே கூறி மகிழ்ந்தனர். அப்பெயர் பெற்ற செந்தில் பாலாஜியை முடிக்க வேண்டுமென்று முடித்ததோடு, அவர் போட்டியிட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலை நிறுத்தியவர் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தான் என்பது அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரியவந்த நிலையில் முதல்வர் ஜெ மட்டும் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர். 


 
அ.தி.மு.கவினர் மட்டுமில்லாமல், கரூர் மட்டுமில்லாது தமிழக அளவிலும், போக்குவரத்து துறையிலும், இந்திய அளவில் உள்ள விளையாட்டு வீரர்களும் ஏங்கி உள்ள நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக அனைத்து அ.தி.மு.க வினரும் களமிறங்க ஆரம்பித்துள்ளனர்.
காரணம் என்னவென்றால், அம்மாவின் உத்திரவை மீறி அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளரை மாற்றும் பொருட்டு, அவ்வப்போது, அரவக்குறிச்சி தொகுதியிலேயே வேட்பாளர் செந்தில் பாலாஜியை அழைக்காமல், அ.தி.மு.கவினரின் மனதில் என்ன உள்ளது என்று இரகசியமாக விசாரித்தது மேலிடம்.
 
மேலும் முந்தையதாக போட்டியிட்ட செந்தில்நாதனை அழைத்து விட்டும், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீதுவை அழைத்து விட்டு அரவக்குறிச்சி தொகுதியில் மக்களை தேடி என்ற நிகழ்வு மூலம் ஆங்காங்கே பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்கும் போது அங்குள்ள பொதுமக்கள் தேர்தலை நிறுத்தி விட்டு நாடமாடுகின்றாயா ? என்றும், எப்போதும் இல்லாத அக்கறை இப்போது மட்டும் ஏன்? என்றும், ஒரு சில பகுதிகளை மட்டும் தான் விசிட் அடிக்கின்றார் என்றும் முற்றுகையிட அங்கிருந்து தப்பித்துள்ளார். 


 

 
இந்த சம்பவங்கள் ஆங்காங்கே ஒரு சில செய்தித்தாள்களில் மறைக்கப்பட்டாலும், தற்போதைய மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லாமல் கூட இப்படி செய்தால் எப்படி என்று அ.தி.மு.க வினர் வட்டாரம் போயஸ் கார்டன் வரை புகார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் அப்போது செந்தில் பாலாஜியை வளர்த்து விட்டார்..  இப்போது விஜயபாஸ்கர்..  நாளை யாரோ? என்று கேளிக்கைகள் மாதிரியும், நையாண்டி முறையில் ஆங்காங்கே நக்கலடிக்கும் செயல்களும் கரூர் மாவட்டத்தில் நடந்தேறி வரும் நிலையில்,  கரூர் மாவட்ட அளவில் அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் செழிப்பில்லை.
 
உதாரணத்திற்கு தெருமுனை கூட்டம், பிரச்சார கூட்டம், பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் கூட்டம் குறைவாக காணபட்ட நிலையில், இன்று நடைபெற்ற அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் அருகே உள்ள வெங்கமேட்டில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் 100 நபர்கள் கூட இல்லையாம்!
 
இதே கடந்த வருடம் செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருக்கும் போது சுமார் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் பங்கேற்றதும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியவந்துள்ளது. 
 
மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது துறையை மட்டுமே நிர்வகிக்கும் பொருட்டு எப்படி கட்சி பொறுப்பை பார்ப்பார் என்று அ.தி.மு.க வினருக்கே சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளராகவும், கரூர் முன்னாள் எம்.எல்.ஏ வும் மட்டுமில்லாமல் தமிழக அளவில் ஏன், இந்திய அளவில் பெரும் புரட்சியை தனது துறையில் அதுவும் அம்மாவின் ஆணைக்கிணங்க நிறைவேற்றியவர் செந்தில் பாலாஜி என்பதும், ஆனால் தற்போது செந்தில் பாலாஜி எந்த வித நிகழ்ச்சிகளுக்கும், தம்பித்துரையும், தம்பித்துரையின் சிபாரிசில் அமைச்சராகவும், மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் செந்தில் பாலாஜியை அழைக்காமல் அவமானபடுத்தி வருகின்றனர். 
 
ஆனால் கட்சி நிகழ்ச்சிக்கு தான் அவரை அழைக்க வில்லை என்றால் அவர் படித்த கரூர்  அரசு கல்லூரியின் 50 வது பொன்விழாவிற்கு கூட அழைக்காததும் அம்மாவின் செவிபட சென்றுள்ள நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க கைப்பற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு செந்தில் பாலாஜியால் மட்டுமே முடியும், செந்தில் பாலாஜி வந்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலும், அதை தொடர்ந்து வரும் மக்களவை தேர்தலும் செல்லுபடியாகும் என்பது அ.தி.மு.க வினரின் வட்டாரத்தில் பெரும் பேச்சாக எழுந்துள்ளது. 
 
இந்த விஷயம் அம்மா அறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வரை சென்றுள்ளதாம். எது எப்படியோ, மீண்டும் அ.தி.மு.க செயலாளராக செந்தில் பாலாஜி வந்தால் கட்சிக்கு வலு மட்டுமில்லாமல் அம்மாவின் கரம் வலுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்