வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (16:49 IST)

முதல்வர் ஜெ. மருத்துவமனையில் : பிறந்த நாள் விழாவை மறுத்த செந்தில் பாலாஜி

முதல்வர் ஜெ. மருத்துவமனையில் : பிறந்த நாள் விழாவை மறுத்த செந்தில் பாலாஜி

தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், முன்னாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க தரப்பிலும், மாணவ, மாணவிகள், இளைஞர்களிடம் பெருமளவிலும், நல்ல வரவேற்பு பெற்றவர். 


 

 
ஏனெனில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வருடத்திற்கு 365 ¼ நாளும் விளையாட்டு போட்டிகளை நடத்தி மாணவ, மாணவிகளை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் முதல்வர் அம்மாவின் வழியில் என்று தமிழக அளவில், ஏன் இந்திய அளவில், ரூ.18 முதல் ரூ.25 வரை விற்கும் வாட்டர் பாட்டில்களை, தமிழக போக்குவரத்து துறை சார்பில் ரூ.10-க்கு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடைய மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ரயில்வே துறையே இந்த திட்டத்தை எடுத்து நடத்த முடிவுக்கு வந்தது. 
 
பல்வேறு திட்டங்களை எல்லோரிடமும், கூடி ஆலோசித்ததோடு, தானாகவே முடிவை எடுத்து அதை முதல்வரின் உத்திரவுபடி நடத்தி காட்டியவர் செந்தில் பாலாஜி. இது மட்டுமில்லாமல் பல்வேறு திட்டங்களை தீட்டி வந்த நிலையில் சிறு வயதிலேயே அதுவும் முதல்வரின் பெயரில் இரத்த தானம் முகாம், மருத்துவ முகாம் என்று நடத்தி அதை கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வைத்தார். 
 
அது பொறுக்காமல், மூத்த நிர்வாகிகளின் பிடியில் கட்சியை விட்டு விலக்க சதி திட்டம் தீட்டி ஒரங்கட்டப்பட்டார். மேலும் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவரை, ஜெயலலிதாவே வெறுக்கும் வகையில் ஏராளமான புகார்களை மூத்த நிர்வாகிகள் துணையோடு, பல்வேறு புகார்களுக்கு ஆள்படுத்தப்பட்டு, அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார். 
 
தற்போது, அம்மாவின் (முதல்வர் ஜெயலலிதாவின்) பார்வை பட்டு, மீண்டும் அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளராக அதுவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பெயரிலையே அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க வின் மூத்த முன்னோடிகள் டெல்லி வரை தேர்தலில் பணம் பட்டுவாடா, அரவக்குறிச்சி தொகுதியில்தான் செய்யப்படுகின்றது என்பதை டெல்லி வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டு தேர்தலையும் ரத்து செய்தனர்.
 
அதன் பின்னர் நடக்கும் அனைத்து கட்சி கூட்டங்களிலிருந்தும் கட்சியில் இருந்து ஒரங்கட்டப்பட்டார் செந்தில் பாலாஜி. முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில்,  அப்போது முதல் இன்று வரை சென்னை தனியார் மருத்துவமனை வளாகத்தின் முன்பே அம்மாவிற்காக பல்வேறு பூஜைகளும், பிரார்த்தனைகளும் பப்ளிசிட்டிக்காக செய்யாமல், செய்த விஷயம் ஊடகம் மூலம் அம்மாவிற்கு தெரியாமல், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுக்கு தெரிய, வர உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அம்மாவின் ஆனைக்கினங்க மீண்டும்  நியமிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் அவரது பிறந்த நாள் இன்று (20-10-16) கொண்டாடப்பட இருந்தது. ஆனால் அதை வேண்டாம் என தவிர்த்து விட்டார். 
 
பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றைகளில் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ”அம்மா பூரண குணமடைந்தால் மட்டுமே எனக்கு வாழ்த்து தெரிவியுங்கள், அதுவரை எனக்கு பிறந்த நாளே கிடையாது, அம்மாவின் ஆணைக்கிணங்க தேர்தலின் நிற்கிறேன். தேர்தலில் எந்த வித ஆடம்பரமும் கூடாது.. எளிய முறையில் மாண்புமிகு அம்மாவின் உத்திரவின் கீழ் தான் எதுவும் நடக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 
சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்