ரஜினி அரசியலுக்கு வந்து பார்க்கட்டும் - கே.பி.முனுசாமி அதிரடி


Murugan| Last Modified வெள்ளி, 19 மே 2017 (14:53 IST)
தமிழ்நாட்டில் தற்போது சிறந்த அரசியல் தலைவர்களே இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சரும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

 
கடந்த சில நாட்களாக, ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுவும், தமிழகத்தில் தற்போது சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை என்ற கருத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி “ரஜினி சிறந்த நடிகர். அவர் மீது அனைவரும் மரியாதை வைத்திருக்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தற்போது நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என அவர் கூறுவதை ஏற்கமுடியாது. மக்களின் செல்வாக்கை பெற்ற தலைவராக ஓ.பி.எஸ் இருக்கிறார்.  
 
ரஜினிகாந்த் நடிகராக இருக்கிறார். அரசியலில் இருந்தால்தான் அரசியல்வாதிகள் பற்றி தெரியும். அவர் அரசியலுக்கு வரட்டு. அப்படி வந்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று தெரியும்?” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :