வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (22:31 IST)

ஆளுனருக்கே கெடு விதித்த செயல் தலைவர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ஆளுனரிடம் நேரில் வலியுறுத்த இன்று ஆளுனரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது துணை எதிர்கட்சி தலைவர் துரைமுருகன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐ.யு.மு.எல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.



 
 
இந்த நிலையில் ஆளுனரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஆளும் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். முதலமைச்சர் மீதான நம்பிக்கையை 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இழந்து விட்டனர். மீதம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். ஆளுநர் இன்னும் ஒரு வாரத்தில்  சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறபிக்கவில்லை என்றால், அதன் பின்னர் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடி செல்வோம்”
 
ஆளுனருக்கே ஒரு வாரம் கெடு கொடுத்த ஸ்டாலின், கெடு முடிந்ததும் அதிரடி முடிவெடுப்பாரா? இல்லை இதுவும் வெறும் புஸ்வான பேச்சா? என்பதை ஒருவாரம் பொறுத்திருந்து பார்ப்போம்