Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பா ஓ.பி.எஸ் பக்கம்..மகன் சசிகலா பக்கம் - குழப்பத்தில் பொதுமக்கள்


Murugan| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (13:46 IST)
அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரது மகன் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிற்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதும், அதிமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றனர். அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதவாகவே கருத்து தெரிவித்தார். எனவே, அவர் ஓ.பி.எஸ் பக்கம் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்நிலையில், அவரது மகன் வி.கே.பி சங்கர், சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் ஒரு போஸ்டர் பாளையங்கோட்டை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. 
 
கருப்பசாமி பாண்டியன் சசிகலாவிற்கு எதிராகவும், அவரது மகன் சசிகலாவிற்கு ஆதரவாகவும் களம் இறங்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


இதில் மேலும் படிக்கவும் :