வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2016 (16:11 IST)

திமுகவும், அதிமுகவும் இணைந்து நடத்திய அரசியல் சதுரங்க வேட்டை - பலிகடா அமைச்சர் செந்தில் பாலாஜி

சிறுவயதிலே அரசியலில் வெகுவேகமாக முன்னேறியதோடு, அம்மாவின் செல்ல பிள்ளையானதால் அதிமுகவினரே சேர்ந்து வைத்த ஆப்பு ஜெ. விற்கு தெரியுமா தெரியவில்லையா என்று தெரியவில்லை?
 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தோல்வியை கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ராஜினாமா செய்வதாக நாடகம் நடத்தி வருகிறார் ஈ.வி.கே.எஸ் என்கின்றனர் இன்றைய நடுநிலையாளர்கள். ஆனால் இவரது பதவி விலகல் ஏன் என்று காரணம் தோண்ட, தோண்ட கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.
 
நடந்து முடிந்த 2016 தற்போதைய சட்டசபை தேர்தலில் தமிழக அளவில் கடைசியாக வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் கட்சி தான். ஏனென்றால் வேட்பாளர்கள் தங்களது கவனிப்புக்கேற்றவாறு, கட்சி சீட்டுகளை வழங்கியது தான். இந்த விஷயம் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன் மூலம் தற்போது வெளி வந்துள்ளது.
 
கரூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர், கரூர் எம்.எல்.ஏ.வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தலுக்கு முன்பே அவரது வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், எதிர்த்து களம் காணும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பேங்க்.சுப்பிரமணியன் தான் வேட்பாளர் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் அவர் அறிவிக்கப்பட்டதற்கு முன்னரே, கரூர் கே.சி.பி மூலம் நீங்கள் தான் நிற்க வேண்டுமென்றும், ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தான் கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூற செலவு செய்ய வேண்டுமே என்று காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் கூற, அதற்கு கே.சி.பழனிச்சாமியோ, ரூ. 15 கோடி கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் எப்படியாவது எம்.எல்.ஏ ஆகி விட வேண்டுமென்று அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து ஒரு வார காலமாக சென்னையிலேயே டேரா போட்ட பேங்க்.சுப்பிரமணியன் ரூ 50 லட்சம் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கொடுத்து பின்பு, கட்சி சீட் வாங்கியுள்ளார்.
 
பின்னர், அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பேங்க்.சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்ட பின்னர், காமராஜர் சிலைக்கு மாலை போட சுமார் 3 ஆயிரம் நபர்கள் அடங்கிய கும்பலை கூட்ட, அப்போதே அதிமுகவிற்கு சற்று சந்தேகம் நீடித்தது. மேலும் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கிற்கு ரூ. 1000 வீதம் கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.
 
இந்நிலையில் ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாக மாற்றி வைத்திருந்த செந்தில் பாலாஜியை நாம் கலட்டி விட்டுள்ளோம். இந்நிலையில் நமது வேட்பாளர் விஜயபாஸ்கரை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டுமென்று, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை மூலம் பேங்க்.சுப்பிரமணியனிடம் ரூ 30 கோடி பேசப்பட்டது.
 
பின்னர் இவரது மார்க்கெட் விலை இவ்வளவா? என்று கருதி வேண்டாம் என்று திமுக கே.சி.பழனிச்சாமியும், காங்கிரஸ் கட்சி பேங்க்.சுப்பிரமணியனும் ஒன்று கூடி, அவர்களுக்கு ஆதரவாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரையின் மூலம் நீங்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கூற? வேட்பாளர்களுக்கு ரூ. 300 வீதம் கொடுப்போம் என்று விஜயபாஸ்கர் தரப்பும், பேங்க்.சுப்பிரமணியன் தரப்பும் தேர்தலுக்கு முன்னரே சுமார் 7 நாட்களுக்கு முன்னர் பைசல் பேசியுள்ளனர்.
 
ஆனால் இந்நிலையில் அதிமுக தரப்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையோ, கரூர் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.வி.க ஆகியோர் மூலம் வாக்குகளுக்கு ரூ. 500 கொடுக்க, இதையறிந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியனோ, என்ன நீங்கள் சொன்ன சொல்லை மீறி விட்டீர்கள் என்று ரூ. 1000 கொடுத்துள்ளனர்.
 
ஆனால் ரூ. 1000 வாக்கிற்கு கொடுக்கும் அளவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேட்டால், கரூர் கே.சி.பழனிச்சாமியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும் பழியை தூக்கி செந்தில் பாலாஜி மேல் போட இருவரும் கூட்டு சதி தீட்டிய சம்பவம் திமுகவினருக்கே தெரிந்தது.
 
இந்நிலையில் எப்போதும் காங்கிரஸ் கட்சி சார்பில் புடை சூழ காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த போதே நடுநிலையாளர்களுக்கு எதோ, கரூரில் நாடகம் ஒன்று நடக்க உள்ளது என்பதை அறிவார்கள்.
 
கே.சி.பழனிச்சாமி ஏன் செந்தில் பாலாஜி மீது பழி வாங்கிறார் என்றால், கே.சி.பழனிச்சாமியை எம்.பி பதவியில் இருந்து தூக்கியது. இவரே! ஏனென்றால் அமோக வாக்குகளை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தது செந்தில் பாலாஜி தான். மேலும் அங்கே சுற்றி இங்கே சுற்றி, நம்முடைய அரவக்குறிச்சி தொகுதிக்கே மீண்டும் அவரே களம் இறங்க அவருக்கு ஒரு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதே அவரது நோக்கம்.
 
தம்பித்துரைக்கு ஏன் செந்தில் பாலாஜி மீது களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் என்றால்., எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுக கட்சியில் நான் இருக்கின்றேன். இப்போ வந்த பையன், செந்தில் பாலாஜிக்கு முதல்வர் பதவியா? என்று செந்தில் பாலாஜியை பழி வாங்க துடித்தார்.
 
இந்த இருவர்களும் பழிவாங்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அது தான் செந்தில் பாலாஜியால் பழி வாங்கப்பட்ட ரெயின்போ பாஸ்கர் என்கின்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் தாந்தோன்றி ஒன்றியக்குழு தலைவர் பதவி கிடைக்க வேண்டியதை செந்தில் பாலாஜி தரப்பினர் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
ஆனால் செந்தில் பாலாஜியோ, தான்தோன்றி ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராமலிங்கத்திற்கு என்று அவர் எடுத்த முடிவு இல்லையாம். எல்லாம் கட்சி எடுத்த முடிவு என்றால், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அன்றும் இருந்த தம்பித்துரை கூட பின்னணியில் இருக்கலாம் அல்லவா என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
 
ஆகவே செந்தில் பாலாஜியால் பழி வாங்கப்பட்டவர் என்று கூறப்படும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்து அரசியல் சதுரங்க வேட்டையை அதிமுகவை சார்ந்த தம்பித்துரையும், திமுகவை சார்ந்த கே.சி.பழனிச்சாமியும் திட்டம் தீட்ட, அதில் அதிமுக வேட்பாளராக விஜயபாஸ்கரையும், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக பேங்க்.சுப்பிரமணியனையும், நிறுத்தி அவர்களது சதுரங்கத்தில் காயை நகர்த்தினர்.
 
அதில் முதல் காய் தான், ரூ. 30 கோடி பேரம் பேசப்பட்டது. பின்னர் பேரம் படியாத நேரத்தில் திமுக கே.சி.பழனிச்சாமியோ, காங்கிரஸ் வேட்பாளருக்கு அரசியல் ஆசை கூறியும், எம்.எல்.ஏ ஆசையை கூறியும், அதிமுக தரப்பில் விஜயபாஸ்கருக்கு அரசியல் ஆசை கூறி, எம்.எல்.ஏ ஆசையை கூறி மாறி, மாறி காயை நகர்த்த, செந்தில் பாலாஜிக்கு தான் பதவி போயிடுச்சே என்று கூறி, அவர்களது ஆதரவாளர்களாக இருந்த தற்போதைய கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பனும், கரூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.வி.க.வும், விஜயபாஸ்கரை கொம்பு சீவி விட, பழி எல்லாவற்றையும் அரசியல் சூழலில் செந்தில் பாலாஜி மேல் சுமத்தி தனது ராஜ தந்திரத்தை திமுகவும், அதிமுகவும் நடத்த இதில் பழிகடா ஆனது செந்தில் பாலாஜி தான்.
 
ஆனால் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ, சுமார் 441 வாக்குகள் வித்யாசத்தில் தானே ஜெயித்தார் என்றும், ஏன் வழக்கு போடலாமே என்று பேங்க்.சுப்பிரமணியனை மிரட்ட, பேங்க்.சுப்பிரமணியோ நிலைமையை அதிமுக தம்பித்துரையிடம் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது. நான் பரிந்துரை செய்துள்ளேன். நீங்கள் எம்.எல்.ஏ வாக இருந்தால் வெறும் எம்.எல்.ஏ ஆக தான் இருக்க முடியும் என்றும், ஆகவே ரூ. 30 கோடி தொகை பேரம் பேசப்பட்டு ஜெயித்ததை எதிர்த்து வழக்கு என்று வாயை திறக்க கூடாது என்று சதுரங்க வேட்டை முடிந்துள்ளது.
 
இப்போது கடைசியில் அரசியல் சதுரங்க வேட்டையில் தற்போது பழி கெடா ஆன செந்தில் பாலாஜி அதிமுக கோட்டையாக கரூர் மாவட்டத்தை வைத்திருந்தார். ஆனால் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்ததோடு, கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு விடுக்காமல், தான் தான் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் என்றும், அடுத்த முதல்வர் என்று கங்கணம் கட்டிய தம்பித்துரையின் சூழ்ச்சி தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மத்தியில் வரை சென்றுள்ளது.
 
அதனால் தான் இந்த ராஜினாமா நாடகத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தியுள்ளார் என்கின்றனர். காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சியில் உள்ள நடுநிலையாளர்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே முழித்துக் கொண்டுள்ளதாகவும், திமுகவும், அதிமுகவும் எந்த ஒரு முன்னேற்றத்திலும் ஈடுபட வில்லை என்கின்றனர் கரூர் வாழ் பகுதி மக்கள் மட்டுமில்லாமல் இரு கட்சிகளை சார்ந்த நடுநிலையாளர்கள். பார்ப்போம், கட்சியின் நடவடிக்கையை?