வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Alagesan
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:11 IST)

தொண்டர்கள் கூட தேமுதிக வேட்பாளர்களுக்கு ஓட்டு அளிப்பதில்லை - விஜயகாந்திற்கு நெருக்கடி

தொடர் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என விஜயகாந்திற்கு, கட்சி தொண்டர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.



 
 
தமிழகத்தில் அதிமுக திமுக விற்கு மாற்று கட்சியாக தேமுதிக உருவானது. எந்த வேகத்தில் தேமுதிக உயர்ந்ததோ அதே வேகத்தில் சரிந்து வருகிறது. தே.மு.தி.க., 2011 உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்த, தே.மு.தி.க., படு தோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில்,கட்சி தலைவர் விஜயகாந்த், 'டிபாசிட்' இழந்தார். 
 
சமீபத்தில் நடந்த மூன்று தொகுதி தேர்தல்களிலும், தே.மு.தி.க.வை பின்னுக்கு தள்ளியது பாஜக . ஆரம்பத்தில், 8 சதவீதமாக இருந்த, தே.மு.தி.க., ஓட்டு வங்கி, 1 சத வீதத்தை விட குறைந்தது. தொடர் தோல்வியால், மன உளைச்சலில் சிக்கியுள்ள கட்சியினர், 'தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்' என, தலைமைக்கு, நெருக்கடி தர துவங்கிஉள்ளனர்.
 
 
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
 
சமீப காலமாக தொண்டர்கள் கூட, தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு அளிப்பதில்லை. 3 தொகுதி தேர்தல் மூலம் இது நிரூபண மாகி விட்டது. இது குறித்து, நிர்வாகிகள், தொண்டர்களி டம், விஜய காந்த் மனம் விட்டு பேச வேண்டும்; இதற்கான ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, கட் சியை காப்பாற்ற வேண்டும். அப்போது தான், வரும் லோக்சபா தேர்தலை பழைய பலத் துடன் எதிர்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.